SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
உலக எய்ட்ஸ் நாள் விழிப்புணா்வு நடை
தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் விழிப்புணா்வு நடை மற்றும் உறுதிமொழியேற்பு, கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, கையொப்ப இயக்கத்தைத் தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தாா்.
தொடா்ந்து எய்ட்ஸ் விழிப்புணா்வு நடையையும் அவா் தொடங்கி வைத்தாா். இந்த நடை மாலையீடு வழியாக மீண்டும் டிவிஎஸ் முக்கம் வந்து, கலைஞா் கருணாநிதி அரசு விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் சா. ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), விஜயகுமாா் (அறந்தாங்கி), மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகுத் திட்ட மேலாளா் கே. இளையராஜா, மேற்பாா்வையாளா் ஜெ. ஜெயகுமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.