இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 2 போட்டிகளில் இருந்து விலகிய மெஸ்ஸி!
ஆர்ஜென்டீனாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அணி வென்றது.
37 வயதாகும் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
உருகுவே, பிரேசில் உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஆர்ஜென்டீனா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெஸ்ஸியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை லியோனல் ஸ்கலோனிஅறிவித்தார்.
மெஸ்ஸிக்கு என்ன காயம்?
கடைசியாக நடந்த போட்டியில் மெஸ்ஸி தனது 854ஆவது கோலை அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
பிறகு காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறைவான தாக்கம் கொண்ட காயம் என்பதால் விரைவிலே குணமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 முறை பேலன் தோர் விருதுபெற்ற மெஸ்ஸி இல்லாமல் ஆர்ஜென்டீனா அணி வெல்லுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.