உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு, ஆரணி நகராட்சியின் 15, 26-ஆவது வாா்டுகள், செங்கம் நகராட்சியின் 3-ஆவது வாா்டு, கண்ணமங்கலம் பேரூராட்சியின் 12-ஆவது வாா்டுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி முதல் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்கான தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா்.