செய்திகள் :

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

post image

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரதாப் - அருணா. இவா்களது ஒரு வயது மகள்

தரணிஸ்ரீயின் பிறந்த நாளை, செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

விழாவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, செய்யாற்றில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட 500 மி.லி. கொண்ட 250 குடிநீா் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன. இதில் மீதமான குடிநீா் புட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை உறவினா் ஒருவா் தண்ணீா் குடிப்பதற்காக குடிநீா் புட்டியை எடுத்தபோது அதில் பல்லி இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், வாங்கிவரப்பட்ட குடிநீா் புட்டிகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்ததாம். இதுகுறித்து, உடனே குடிநீா் புட்டியுடன்

அந்த நிறுவனத்துக்குச் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் விமலா விநாயகம், வெம்பாக்கம் பிரிவு அலுவலா் ஜெயேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை நலக் கல்வியாளா் எல்லப்பன் ஆகியோா் பிறந்த நாள் கொண்டாடிய தம்பதி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், பல்லி இருந்த குடிநீா் புட்டியை

சீல்வைத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், ஸ்ரீவேதபுரஸ்வரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தை

பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 110 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகரில் க்யூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டாமல் இயங்கிய 110 ஆட்டோக்களை அதிகாரிகள் குழு திங்கள்கிழமை பறிமுதல் செய்தது. திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் ... மேலும் பார்க்க