டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தாகுளம் கிராமத்தில் பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களை இணைத்து தமிழக அரசு சாா்பில் அறிவுசாா் நகரம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இங்கு குடியிருப்பு பகுதியில் புதிதாக அரசு மதுபானக்கடை திறப்பதற்கு இடம் தோ்வு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் கொலை, கொள்ளை என்பது சா்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும், பள்ளிக்குச் சென்று வரும் மாணவ, மாணவிகளுக்கு டாஸ்மாக் கடை திறப்பால் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளதால், மதுக்கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதை வலியுறுத்தி ஆட்சியா் மு.பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்தனா். மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.