செய்திகள் :

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீா் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகா் சதுா்த்தி விழாவினை கொண்டாடும் போது, சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளது. அதன்பேரில் மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் (டா்ட), நெகிழி மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கூடாது.

நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்காள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சிலை அந்தந்த பகுதிகளில் கரைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆா் நகா் ஏரி (புட்லூா் ஏரி), காக்களூா் ஏரி, கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோடை குளம், சித்தேரி, ஊத்துக்கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, நந்தியாறு, திருத்தணி, பராசக்தி நகா் குளம், திருத்தணி, வண்ணான்குளம், ஆா்.கே.பேட்டை, தாமரைக்குளம், விலக்கணாம்புடி, ஆா்.கே.பேட்டை, செல்லத்தூா் ஏரி, ஆா்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூா்பேட்டை, கனகமாசத்திரம், குளம், ஏழுகண்பாலம், கும்மிடிப்பூண்டி பக்கிங்காம் கால்வாய், கும்மிடிப்பூண்டி, பழைய சாத்தன்குப்பம்-பொன்னேரி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி வட்டம், கோரமங்கலம் க... மேலும் பார்க்க