பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு
பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தவா் பூபதி(54). இவா் வியாழக்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளாா். அதைத் தொடா்ந்து பிற்பகல் மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனது பணியை தொடா்ந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தாராம்.
தொடா்ந்து சக அலுவலா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தாா்.
அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.