செய்திகள் :

‘எனக்கொரு ‘தாய்மடி’ கிடைக்குமா?’ - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அதுவொரு புஷ்பக விமானம் போலிருந்தது. ஆனால், அது புஷ்பக விமானமல்ல.,! எதோ வானிலிருந்து இறங்கி வந்த வானூர்தி என்று மட்டும் தெரிந்தது!. எந்த கிரகம் என்று புரியவில்லை!. அதிலிருந்து இறங்கி நடந்து வந்தது ஒரு ஏலியனல்ல. ஒரு ஏழைக் கிழவி!. 

அவள் ஏழை என்பது அவளின் எளிய ஆடையில் புலப்பட்டது. அது ஆதிகாலத்து ஆடை!. ஒரு யுக யுகப் பழசு!

வாசலில் நின்று கொண்டிருந்த குழந்தை கேட்டது..

‘யார் நீங்கள்….?’

அந்தக் குழந்தையைப் பார்த்துப் பாட்டி பதில் சொல்லாமல் சிரித்தாள்!.

‘சொல்லுங்கள் யார் நீங்கள்?!’ என்றது மீண்டும் குழந்தை.

‘சொல்றேன் குட்டி…! மொதல்ல நீ இப்படி வாசல்ல வந்து நிக்கலாமா!? ரோட்டுல பஸ் லாரி ஆட்டோல்லாம் வேகமாப் போகுதே! அடிகிடி பட்டுடுடாதா?!’ என்றாள் அன்பாகப் பாட்டி.

‘அதெல்லாம் போகட்டும்., எனக்குப் பழகிப்போச்சு.’ சொல்லுங்க நீங்க யார்னு கேட்டேனே?!’

‘அது சொல்றேன்!. உங்க வீட்டுல அப்பா அம்மா இல்லையா?

இரண்டுபேரும் வேலைக்குப் போயிட்டாங்க!’

‘உனக்கு அண்ணா அக்கா..!?’

இப்போல்லாம் எங்களுக்கு அக்கா அண்ணன்னு யாரும் இல்லை. இருந்தா அவங்களும் வேலைக்குப் போயிடுவாங்க இந்நேரம்! இப்போ. நாங்க எல்லாருமே  வீட்டுக்கு ஒண்ணுதான் இருக்கோம்!

‘ஓ! அப்ப, நீ மட்டும்தான் தனியா இருக்கியா?’

‘ஆமாம். அட, சொல்லுங்க யார் நீங்க?1’

‘ஏன் கொழந்தே அவசரப்படறே..?! உனக்குத் தாத்தா பாட்டி?’

‘யாருமே… இல்லை!’

யாருமே இல்லையா? அடப்பாவமே..! நான் யாராவது ஒரு  பாட்டியைத் தேடித்தான் இங்க வந்தேன்!’

``நீங்களே ஒரு பாட்டி! நீங்க ஒரு பாட்டியைத் தேடி வந்திருக்கீங்களா? எதுக்கு?" கேட்டது குழந்தை.

‘உனக்குத் தூங்க, ராத்திரி யாரு கதை சொல்லுவாங்க?’ என்றாள் பாட்டி.

கதை கிதையெல்லாம் கிடையாது!

கதை கேட்க மாட்டயா?

கதைகேட்டா உதைதான் கிடைக்கும்!

கதை சொல்ல ஆள் இல்லையா?

எப்படி இருப்பாங்க.?!. தாத்தா பாட்டி எல்லாம் அமெரிக்காவுல..! நாங்க இருக்கிறது இந்தியாவுல..! ‘ஸ்கைப்புலதான் பார்க்கணும் பேசணும்.  அப்படியே கதை கேட்கலாம்னா.. இங்க ராத்திரியா இருக்கறப்போ அங்க பகல். அங்க ராத்ரின்னா இங்க பகல்…! நாங்க ஓரிடம் அவங்க ஓரிடம்!

அய்யோ பாவம்! அப்ப ரத்திரி எப்படித் தூங்குவ?!

‘செல்லை ‘ஆன்’ பண்ணிக் கைல  கொடுத்துடுவாங்க…! ‘யூ டியூப்ல’ கேப்பேன்! அப்படியே தூக்கம் வந்தா தூங்கிடுவேன்!

அடப் பாவமே!.கதையே கிடையாதா?! அப்ப நான்  வந்தது வேஸ்ட்!

‘நீங்க யாருன்னே சொல்லலையே?! ஏன் வந்தீங்க? ’ கேட்டது குழந்தை.

‘ஒரு காலத்தில் நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டி நான்தான். ‘ அது

‘உனக்குத் தெரியுமா?

எனக்குத் தெரியாது!

ஒருகாலத்துல உன்ன மாதிரி கொழந்தைகளுக்கு என்னைக் காட்டித்தான் சோறே ஊட்டுவாங்க! நான் வடை சுடறதா சொல்லி!… அங்க வடையும் இப்போ சுட முடியலை சுட்ட வடை எல்லாம் சும்மா கெடக்குது! வாங்கித் திங்கவும் ஆளில்லை!

உனக்குக்குகூட ரெண்டு வடை கொண்டாந்திருக்கேன்..! நிலாவுல இருந்து! உனக்கு வேணுமா? கேட்டாள் பாட்டி.

அய்யே, வேண்டாம்.! வேண்டாம்!! தெரியாதவங்க எதாவது கொடுத்தா வாங்கக் கூடாதுன்னு அம்மா சொல்லீருக்காங்க! உங்களுக்குப் பாடத் தெரியுமா?

ஓ ! நல்லாப் பாடுவேனே ! அங்கிருந்தே எத்தனை பாட்டு கேட்டிருக்கேன் நிலாதான் நான் குடியிருந்த இடம்! அதைக் காட்டித்தான் பாட்டுப் பாடுவாங்க இங்கிருந்து!.

இப்ப ஏன் நீங்க அங்கிருந்து இங்க வந்தீங்க!?

 வேறொன்னும் இல்லே.. சயின்ஸ்  வளர்ந்துடுச்சுல்ல?!… பூமி நாடுக எல்லாம் போட்டிபோட்டுட்டு அங்க வர ஆரம்பிச்சுட்டாங்க..! என் ‘பிரைவஸி’ போயிடுச்சு! அதனால..

‘அதனால…???!!!’

‘எத்தனை காலத்துக்கு என்னை வைத்துக்  கதை சொன்னாங்க?’

‘இப்ப இங்க நான் இறங்கி வந்ததுக்குக் காரணம்.. எனக்கே இங்க ஒரு கதை கேட்கணும்னு  ஆசை வந்துட்டுது. இங்கிருக்கிறவங்க நல்ல கதைவிடுவாங்களாமே??!!!

‘எது? எது?… என்ன!? என்றது கோபமாக குழந்தை.

இல்ல இல்ல…! கோவிச்சுக்காதே! இங்க நல்லா கதை சொல்லுவாங்களாமே?!

எனக்குத் தெரியாது!

நிலாப் பாட்டியான எனக்கு ‘ஒரு தாய் மடி கிடைச்சா’ அவங்க மடில படுட்துட்டுக் கதைகேட்கலாமேன்னு ஆசைல வந்தேன்! உனக்கே அதுக்கெல்லாம் வழியில்ல போல?!…நீயே கேட்க முடியாது போலிருக்கே?! அப்புறம் நானெப்படி?!’  கேட்டாள் பாட்டி.

பாட்டி, நீ செல்லு!  நீ, கம்ப்யூட்டரெல்லாம் யூஸ் பண்ணுவேணா…  விகடன் ஆப்பில் கதை படி..! நிறைய கதைகள் படிக்கலாம். என்றது குழந்தை.

 அதைக் கேட்ட பாட்டி, நிலாப் பாட்டி நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்!

ஒரு பாட்டி கதை படிக்கிறாள் தயவு செய்து ‘டிஸ்டிரஃப்’ செய்யாதீங்க!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நந்திபுரத்து நாயகன் : சாளுக்கியர்களை வீழ்த்திய பல்லவ மன்னனின் கதை | Vikatan Play

பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ள... மேலும் பார்க்க

நொறுக்குத் தீனி! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்; நிறைவுரை ஆற்றும் முதல்வர் ஸ்டாலின்

இலக்கியப் பொதுவாழ்வில் கவிஞர் வைரமுத்து அரைநூற்றாண்டைக் கடந்திருக்கிறார். 53 ஆண்டுகளுக்கு முன்பு 1972இல் அவரது முதல் கவிதை நூலான வைகறை மேகங்கள் வெளிவந்தது. இதுவரை 39 நூல்கள் படைத்திருக்கிறார். 7500 பா... மேலும் பார்க்க

Voynich: உலகின் மிக மர்மமான புத்தகம் 'வொய்னிச்' பற்றி தெரியுமா? இப்போது எங்கு இருக்கிறது?

உலகின் மிக மர்மமான புத்தகம் என்று அறியப்படும், வொய்னிச் கையெழுத்துப் பிரதி பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள், வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. யாராலும் இந்த வொய்னிச் கையெழுத்த... மேலும் பார்க்க

மினசோட்டாவில் ஒலித்த இராசேந்திரச் சோழன் வசனம் - பாராட்டுக்களைப் பெற்ற நவீன நாடகம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க