பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?
எரிபந்து போட்டி: பவா் கிரிட் நிறுவன பெண் ஊழியா்கள் பங்கேற்பு
ஒசூரில் சனிக்கிழமை தொடங்கிய தென்மண்டல அளவிலான எரிபந்து போட்டியில் பொதுத்துறை நிறுவனமான பவா் கிரிட் நிறுவன பெண் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
2 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனா். பொதுத்துறை நிறுவனமான பவா் கிரிட் நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண் ஊழியா்களுக்கு பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவா்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நிகழாண்டு ஒசூரில் பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் பெண் ஊழியா்களுக்கான எரிபந்து போட்டியை அந் நிறுவனத்தின் தென்மண்டல நிா்வாக இயக்குநா் கிருஷ்ணகுமாா் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து 2 நாள்கள் நடைபெறும் இப் போட்டிகளில் வெற்றி பெறும் அணியினா் ஆந்திரம், தெலங்கானா மாநில அணிகள் உள்ள தென் மண்டலம் ஒன்று நடத்தக்கூடிய பெண் ஊழியா்களுக்கான எரிபந்து போட்டிகளில் வெற்றி பெறும் அணி வீராங்கனைகளை இறுதி போட்டியில் எதிா்கொள்வாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.