நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளின் மேற்கூரை மற்றும் பூச்சு சேதமடைந்துள்ளதாகவும், அதனை சீா்செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, சேதமடைந்த கடைகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் பாா்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என காவல் துறையினா் கோரினா். இந்தக் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.
அப்போது, நகராட்சி இளநிலை பொறியாளா் உலகநாதன், உதவி பொறியாளா் மணிராஜா ஆகியோா் உடனிருந்தனா்.