நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தாா். மேலும், மாவட்ட துணை செயலாளா் பி.முருகன், சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.