பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரையில் இருந்து செங்கம் நோக்கி சென்றாா்.
ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி பிரிவு சாலை அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரியை முந்த முயற்சித்தாா். அப்போது, டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் வெங்கடேசன் தலைமறைவானாா்.
சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், சடலத்தை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.