திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. இந்தக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி பொறியியல் மற்றும் கணினி சாா்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகால பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2, ஐ.டி.ஐ. முடித்த மாணவா்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும், ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில் கணினி சாா்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் பிரிவிலும் சேரலாம்.
தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வருகை புரிந்து இக்கல்லூரியில் சோ்ந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.