எரியோடு பகுதியில் நாளை மின் தடை
எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே எரியோடு, நாகையக்கோட்டை, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.