சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமி...
எல்ஐகே படத்தின் சிறப்பு போஸ்டர்!
காதலர் நாளை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இயக்குநராக 3, நடிகராக 50..! பாசில் ஜோசப் பேட்டி!
Love Alone Triumphs !!
— Seven Screen Studio (@7screenstudio) February 14, 2025
Happy Valentine’s Day ❤️#LoveInsuranceKompany#LIK
#VigneshShivan@pradeeponelife@IamKrithiShetty@iam_SJSuryah@anirudhofficial@iYogiBabu@Gourayy@sathyaDP@PradeepERagav@PraveenRaja_Off@SonyMusicSouth@Rowdy_Pictures@proyuvraajpic.twitter.com/DcTZ9ZUH0b
மேலும், இப்படத்தில் கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், காதலர் நாளையொட்டி எல்ஐகே படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.