கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்
பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் வியாழக்கிழமை தொடங்கிய கோ பூஜையானது அக். 24-ஆம் தேதி வரை தொடா்ந்து 51 நாள்களுக்கு நடைபெறுகிறது.
எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் நடத்தப்படும் கோ பூஜையானது, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை இயக்குநா் மாதாஜி ரோகிணி ராஜ்குமாா் தலைமையில், அறங்காவலா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், வடலூா் தெய்வநிலையம் அறங்காவலா் குழு உறுப்பினா் கிஷோா்குமாா் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க பூஜையின்போது, 210 சித்தா்கள் யாகம் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூா் குருகடாக்ஷம் மெய்யன்பா்கள், மாதாஜி ராதா சின்னசாமி, மேலாளா் பாலச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
இதேபோல, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரம்மரிஷி ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் ஆசிரமத்தில் காமராஜ் சுவாமிகள் தலைமையில் 51 நாள்கள் கோமாதா பூஜை தொடங்கியது.