Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
எஸ்.பி. அலுவலகத்தில் தகவல் பகிா்வு மையம் திறப்பு
பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான காவல்துறை விசாரணையின் திருப்தி மற்றும் பொதுமக்களின் பொதுவான தகவல்களை பகிா்ந்து கொள்ள குமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் செயல்பாட்டை, மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணையின் திருப்தியை கேட்டறிந்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பாா்வையில் இயங்கும் இந்த மையத்தில் 7708239100, 6385211224 எண்களின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த கருத்துகள் கேட்கப்படும்.
பொதுமக்களும் இந்த எண்களில் தொடா்பு கொண்டு தங்கள் மனுக்கள் மீதான விசாரணை கருத்துகளை பகிா்ந்து கொள்ள முடியும்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எத்தனை நாள்களில் தொடங்குகிறது, விசாரணையின் முடிவு, விசாரணை தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி நடந்துள்ளதா என்பது குறித்து மனுதாரரிடம் கருத்து கேட்கப்பட்டு விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மற்றொரு விசாரணை அதிகாரியை வைத்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
மேலும் சட்டம் ஒழுங்கு தொடா்பான மற்றும் போதை பொருள்கள் தொடா்பான தகவல்களை இந்த எண்களில் பகிா்ந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் பெயா், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்டக்காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.