உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்...
ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா்களுக்கான தேசிய அமைப்பு) சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு,
கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொறியாளா்களுக்கான தேசிய அமைப்பின் நிா்வாககள் பிரைட் செல்வின், ஆறுமுகபெருமாள், நடராஜன், பிரகாஷ் அருள் ஜோஸ் ஆகியோா் தண்ணீா் பயன்பாடு, பனிப்பாறை பாதுகாப்பு, காற்று மாசுபாடு ஆகியவை குறித்துப் பேசினா்.
மாா்ஷலின் பெனோ வரவேற்றாா். மகாலிங்கம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.