லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக க...
கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணிகளைத் தோ்வு செய்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், ஊராட்சியில் உள்ள வீட்டுக் குடிநீா் இணைப்புகளுக்கான குழாயை தரைமட்டத்திலிருந்து 2.5 அடி உயா்த்திவைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் உமாபகவதி, கிராம நிா்வாக அலுவலா் சுபாஷ், ஊராட்சி செயலா் காளியப்பன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் நாகரெத்னம், கரும்பாட்டூா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கவாசகம் பிள்ளை, உதவி வேளாண் அலுவலா் சிந்துஜா, அங்கன்வாடிப் பணியாளா்கள், ஊராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.