உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்...
குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில், தக்கலை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. இதுதொடா்பாக அப்பகுதிகளின் சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து, மாணவிகளை மீட்டனா்.
அவா்களைக் கடத்திச் சென்ாக தக்கலை இலப்பகோணம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் அஜித்குமாா் (34) என்ற வழக்குரைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அஜித்குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட தக்கலை துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா்.