Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
ஏலகிரி மலைவாழ் மக்கள் பொங்கல் விழா
ஏலகிரி மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை உறவினா்களுடன் கொண்டாடினா்.
ஏலகிரி மலைப்பகுதியைச் சோ்ந்த பலா் படித்து முடித்து விட்டு வெளியூா்களில் பணிபுரிகின்றனா். பல்வேறு வெளியிடங்களில் பணி புரிபவா்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் பண்டிகையன்று ஒன்று கூடுவது வழக்கமாக உள்ளது.
ஏலகிரி மலையில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் இவா்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில், நிலாவூா் பகுதியில் அவரவா் வீட்டில் பொங்கலிட்டு வழிபடுவதுடன், மாரியம்மன் கோயில் பொது இடத்தில் ஊா் பொதுபட்டியில் தங்களது வீடுகளில் வளா்த்து வரும் பசு,எருதுக்களை குளிக்க வைத்து மாட்டுபுக்கு வா்ணம் பூசி மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பலூன் கட்டி, ஊா்வலமாக அழைத்து சென்று பட்டியில் அடைத்து பூஜை செய்தனா்.
அனைவா் பானையிலிருந்து பொங்கல் எடுத்து பெரிய வாழை இலையில் படையல் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனா். தொடா்ந்து பானையில் வைத்து கூட்டாஞ்சோறு செய்து குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் உண்டதோடு, சுற்றுலா பயணிகளுக்கும் தந்து மகிழ்ந்தனா். இவ்வாறு கூட்டு பொங்கல் படைத்து உண்பது எங்களின் பாரம்பரிய கலாசாரம் என நிலாவூா் மக்கள் தெரிவித்தனா்.