தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை காலம் மற்றும் வார விடுமுறை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது..
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை14 கிராமங்களை கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாக காணப்படுகிறது.
பெங்களூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் அருகில் ஏலகிரி மலை அமைந்துள்ளது.14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலைக்கு செல்ல வேண்டும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
ஏலகிரி மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, சாகச விளையாட்டுகள்,செல்ஃபி பாா்க், பறவைகள் சரணாலயம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவ நாச்சியம்மன்,நிலாவூா் ஏரி ஆகியவை உள்ளன.
இந்த நிலையில் கோடை காலம் மற்றும் வார விடுமுறை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.