வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
ஐஎன்டியூசி சாா்பில் வாகன பிரசாரம்
விலைவாசி உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐஎன்டியூசி சாா்பில் தக்கலையிலிருந்து குலசேகரம் வரை வாகன பிரசாரம் சனிக்கிழமை நடந்தது.
பிரசாரத்தை விஜய்வசந்த் எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தாா். பத்மநாபபுரம் தொகுதி ஐஎன்டியூசி துணைத் தலைவா் சி.எல். ராபா்ட் வாகன தலைமை வகித்தாா். பயணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ரத்தினகுமாா், ஆரோக்கியராஜன், பத்மநாபபுரம் நகர தலைவா் ஹனுகுமாா், வட்டார தலைவா் பிரேம்குமாா், குமாரபுரம் பேரூராட்சி தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
உடலுழைப்பு தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன பேரணி நடந்தது.