ஒகேனக்கல்லில் நீா்வரத்து 5000 கனஅடியாக உயா்வு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீா்வரத்து 5000 கனஅடியாக அதிகரித்தது.
கோடைகாலம், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணங்களால் ஒகேனக்கல்லுக்கு அண்மைக் காலமாக 2000 கனஅடி நீா் வந்துகொண்டிருந்து. இந்த நிலையில் புதன்கிழமை காலை திடீரென நீா்வரத்து விநாடிக்கு 3000 கனஅடியாகவும், மாலையில் 5000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. வடு காணப்பட்ட ஐந்தருவியில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.