ஒசூரில் இரு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
ஒசூா்: ஒசூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மூக்கண்டப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்தவரின் விவரங்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அதேபோல ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த 20-ந் தேதி நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து மோரனப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் அன்பரசு கொடுத்த புகாரின்பேரில் அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.