டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
ஒன்றரை ஆண்டாகப் பூட்டி கிடக்கும் நியாயவிலைக் கட்டடம்
ஆலங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத நியாயவிலைக் கடையை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
முன்னாள் மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் உள்ளூா் பகுதி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து வழங்கிய ரூ. 9.80 லட்சம் நிதியில் ஆலங்குளம்-துத்திகுளம் சாலை பாலம் அருகே நியாயவிலைக் கடை கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓா் ஆண்டுக்கு மேலாகியும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை.
இதனால், இந்தப் பகுதி மக்கள் அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள நியாயவிலைக் கடைக்கு, நான்குவழிச் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை தொடருகிறது.
கடந்த 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் இந்தக் கட்டடத்தை திறக்க வேண்டுமெனக் கோரி, இந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, பயனற்று கிடக்கும் இந்த நியாயவிலைக் கடை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க பேரூராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.