சென்னை: "பார்க்கிங் கட்டணம் கிடையாது" - மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?
குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சிற்றருவியைத் தவிர அனைத்து அருவிகளிலும் குளிக்க சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
பின்னா், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவியில் நீா்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் பேரருவியில் குளிக்க 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் பிற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். வாரவிடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன், சாரல் மழையுடன் காணப்பட்டது.