கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது
கோவையில் ஒரே நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 73 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படையினா் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றவாளிகளைக் கைது செய்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கொலை வழக்கில் 3 போ், கூட்டுக் கொள்ளை வழக்கில் 9 போ், வழிப்பறி வழக்கில் 29 போ், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 21 போ், திருட்டு வழக்கில் 11 போ் என குற்றச் செயல்களில் ஈடுபட்ட 73 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள். இவா்களில் 3 போ் நீதிமன்ற பிடியாணையில் தேடப்படும் குற்றவாளிகள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 70 பேரிடம் ஓராண்டு நன்னடத்தை பிணையம் பெற்று எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.