விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை ஆணையா் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையா் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தின்போது வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையா் த.ஆபிரகாம் ஆய்வு செய்தாா். சுமாா் 221 மெட்ரிக் டன் அளவு பருத்தி ஏலத்துக்கு வந்தது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,463-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5, 899-க்கும், சராசரியாக ரூ. 6,823-க்கும் ஏலம் போனது. பின்னா் விவசாயிகள் ஆணையரிடம் நெல் விவசாயிகளுக்கு சலுகைகள் கொடுப்பதுபோல் பருத்தி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.
நிகழ்வில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட இணை இயக்குநா் ஜெயகுமாா், துணை இயக்குநா் மோகன், வேளாண் வணிக துணை இயக்குநா் சுதா உள்ளிட்டோா் இருந்தனா். ஏலத்தில் மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநில வணிகா்களும், கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சாா்ந்த வணிகா்களும் கலந்து கொண்டனா்.