ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெலட்டூா் வழியாக கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவில், பாபநாசம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான துரை. சண்முகபிரபு கலந்துகொண்டு கொடியசைத்து சிற்றுந்து சேவையைத் தொடங்கிவைத்து இனிப்புகள் வழங்கினாா். விழாவில், பாபநாசம் அதிமுக நகரச் செயலாளா் கோவி. சின்னையன், பாபநாசம் பேரூராட்சிக் கவுன்சிலா் எம்.ஆா். பாலகிருஷ்ணன், தேவராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக சிற்றுந்து உரிமையாளா் தேவராயன்பேட்டை காா்த்திக் வரவேற்றாா்.