செய்திகள் :

"ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்; ஆனால்..." - ஆஸி., முன்னாள் கோச் புகழாரம்!

post image

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் 'Hall of Fame' வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC).

ஐ.சி.சி-யின் Hall of Fame பட்டியலில் இணையும் 11-வது இந்திய வீரரான தோனிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தோனி - ICC Hall of Fame
தோனி - ICC Hall of Fame

அந்த வரிசையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் தோனியைப் புகழ்ந்திருக்கிறார்.

ஐ.சி.சி வெளியிட்ட வீடியோவில் பேசிய ஜஸ்டின் லாங்கர், "எல்லா காலத்திலும் சிறந்தவர் தோனி. ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்.

ஆனால், அவர்களால் அது முடியாது. தோனி ஒரு தனித்துவமான கேப்டன், ஒரு தனித்துவமான தலைவர், ஒரு தனித்துவமான மனிதர்.

தோனிக்கெதிராக நீங்கள் விளையாடும்போது, அவர் அவுட் ஆகும் வரையில் ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பது உங்களுக்கே தெரியும்" என்று பாராட்டினார்.

இதே வீடியோவில், ஏபி டிவில்லியர்ஸ், நாசர் ஹுசைன், கேரி கிறிஸ்டன் (இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் 2011), ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தோனியைப் புகழ்ந்தனர்.

'Hall of Fame' பட்டியலில் தோனியுடன், தென்னாப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித், ஹசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி மற்றும் வீராங்கனைகளில் பாகிஸ்தானின் சனா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரையும் ஐ.சி.சி இணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்... மேலும் பார்க்க

RCB அணி விற்கப்படுகிறதா? - பிரமிக்க வைக்கும் மதிப்பு; டியாஜியோ பிஎல்சி நிறுவனம் சொல்வதென்ன?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான... மேலும் பார்க்க

Ashwin: கோபம், நடுவரிடம் வாக்குவாதம்... அஷ்வினுக்கு அபராதம் விதித்த TNPL!

கடந்த ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான TNPL போட்டியின்போது ரவிச்சந்திரன் அஷ்வினின் கொதிப்பான செய்கைக்கு அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராத... மேலும் பார்க்க

TNPL 2025 - பேட்டிங் , பௌலிங்கில் ஸ்வப்னில் சிங்கின் ருத்தரதாண்டவம்! எளிதாக வென்ற சென்னை!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்... மேலும் பார்க்க

MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோணி ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட... மேலும் பார்க்க

RCB: இடம் மாறும் சின்னசாமி ஸ்டேடியம்?- ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த முதல்வர் சித்தராமையா!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிக... மேலும் பார்க்க