ஓடிடியில் ரோந்த்!
மலையாளத்தில் வெளியாகி கவனம்பெற்ற ரோந்த் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சாஹி கபீர் இயக்கத்தில் திலீஷ் போத்தான், ரோஷன் மாத்யூ நடிப்பில் உருவான ரோந்த் திரைப்படம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இரவில் ரோந்து பணிக்குச் செல்லும் காவலர்களான திலீஷ் போத்தானும், ரோஷன் மாத்யூவும் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை அதிகாரப் பின்னணியில் பேசிய இப்படம் ரூ. 6.5 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.
இந்த நிலையில், ரோந்த் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பராசக்தியில் இணைந்த ராணா டக்குபதி!