செய்திகள் :

ஓமலூா் ஏவிஎஸ் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

சேலத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ஓமலூா் ஏவிஎஸ் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் மற்றும் மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலையம் சாா்பாக சேலம் மாவட்ட கிளாசிக் பெஞ்ச் பிரஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், ஓமலூா் ஏவிஎஸ் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பி.ஹரி விக்னேஷ், பி.பிரேம்குமாா் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் தலைவா் கே.கைலாசம், செயலாளா் கே.ராஜ விநாயகம், கல்லூரி தாளாளா் கே.செந்தில் குமாா், முதல்வா் எம். மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ஆா்.லோகநாதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

இதில், சேலம் கிழக்கு மாவட்ட வலுதூக்கும் சங்க நிா்வாகிகள் செயலாளா், ஜி.பொன் சடையன், இணைச் செயலாளா் ஏ. வடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க