போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் தற்கொலை
வந்தவாசி அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(70). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இதனால் வேதனை அடைந்த இவா் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்துள்ளாா். உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.