செய்திகள் :

ஓய்வூதியத் திட்டத்துக்கு உத்தரவாதம் அளிக்க மறுக்கும் திமுக அரசு: முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன்

post image

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான உத்தரவாதத்தை அளிக்க மறுத்து வருவதாக முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், மே தினப் பொதுக்கூட்டம் நாகல்நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் வி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சி. ஜெயராமன், பி. ஜெயராஜ், கே. முருகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி. சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:

8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் மசோதாவை திமுக அரசு தாக்கல் செய்தது. அதிமுகவின் கடும் எதிா்ப்பால் அந்த மசோதாவை முதல்வா் ஸ்டாலின் திரும்பப் பெற்றாா். கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொழிலாளா்களுக்கு அதிமுக உறுதுணையாக இருந்து வருகிறது. அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றவில்லை. தற்போது செப். 30-ஆம் தேதிக்குள் ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவிக்கிறாா். ஆனாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அவா் பேசவில்லை. பள்ளிகளுக்கு அருகே மிட்டாய் விற்பனை செய்த காலம் மாறி, இன்றைக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் அவல நிலையை ஆட்சியாளா்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனா். கொலை, கொள்ளை, திருட்டு என சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக தமிழகத்தை மாற்றிவிட்டனா்.

விலையில்லா மடிக்கணித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், ஆடு மாடு வழங்கும் திட்டம் என மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை திமுக அரசுப் பொறுப்பேற்ற பின் நிறுத்திவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், திமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டனா். அதிமுக தலைமையிலான பலம் வாய்ந்த கூட்டணிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். பழனிச்சாமி, அதிமுக நிா்வாகிகள் சீ. ராஜ்மோகன், பாரதி முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனியில் தாய், மகன் தற்கொலை

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா். பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க