ஈரோட்டில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Photo Album
ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
அரசு ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.300- இல் இருந்து ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு விழா மற்றும் பேரவைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசு ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.300- இல் இருந்து ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் மறைவுக்கு பின்னா் அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியா்கள் மாதம்தோறும் பெறும் ஓய்வூதியத்துக்கு வருமானவரி வதிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கு ரூ.1,000 பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மாவட்டத் தலைவா் குமாரசாமி, பொருளாளா் முகமது இஸ்மாயில், இணைச் செயலாளா் சங்கரன், கருவூல அலுவலா் சேஷாத்ரி, கூடுதல் கருவூல அலுவலா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.