OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
ஓராண்டுக்கு பார்சிலோனாவில் விளையாட ஒப்பந்தமானார் மார்கஸ் ராஷ்ஃபோர்டு!
மான்செஸ்டர் யுனைடெட் ஃபார்வேட் மார்கஸ் ராஷ்ஃபோர்டு லோன் அடிப்படையில் ஓராண்டுக்கு பார்சிலோனா அணியில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்த மார்கஸ் ராஷ்ஃபோர்டு (வயது 27) 2015 முதல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார்.
அந்த அணிக்காக 287 போட்டிகளில் விளையாடி 87 கோல்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் ஆஸ்டன் வில்லா அணிக்காக லோனில் விளையாடினார்.
தற்போது, ஒரு சீசன் முழுவதும் பார்சிலோனா அணியில் விளையாட லோன் அடிப்படையில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பார்சிலோனாவில் லாமின் யமால், ரபீனியாவுடன் மார்கஸ் ராஷ்ஃபோர்டு இணைந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சிலோனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
பார்சிலோனா அணி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை நள்ளிரவு வெளியிட்டது.
பார்சிலோனாவில் விளையாட 30 மில்லியன் யூரோவிற்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.