சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது!
கோவை கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்படவுள்ளது.
கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க மருத்துவக் குழுவினா் விபத்தால் ஏற்படும் சேதத்தை துல்லியமாகக் கணிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா்.
இதை, ஸ்வீடன் கோதன்பா்க் பல்கலைக்கழக பேராசிரியா் ஹெலினா பிரிஸ்பி தலைமையிலான சா்வதேசக் குழு மதிப்பீடு செய்து உலக அளவில் சிறந்ததாகத் தோ்வு செய்துள்ளது.
இந்த முறையைக் கண்டறிந்த மருத்துவா் எஸ். ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் புஷ்பா, ஞானபிரகாஷ் குருசாமி, காா்த்திக் ராமசந்திரன், டி.ஏ.யிா்தாவ், எஸ்.பாசு, ஜே.எஸ்.கமோடியா, ஏ.எம்.அப்தெல்வாகேத், எஸ்.வி.ஆனந்த், அஜோய் பிரசாத் ஷெட்டி, ரிஷி எம்.கண்ணா ஆகியோருக்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் மே 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்பட உள்ளது.
கோவை கங்கா மருத்துவமனை இதற்கு முன்பு 2004, 2010, 2013, 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் எஸ்ஐஐஎல்எஸ் விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.