கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு
சிவகங்கை அருகே காரில் கஞ்சாவை கடத்திய 2 பேரை சிவகங்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா், மானாமதுரை புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில், காரில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தனசேகரன் (38), அவரது தம்பி தனபால் (33) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனா். இரண்டு போ் மீதும் சிவகங்கை, கோயம்புத்தூா், புதுக்கோட்டை, கீரனூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.