மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
செய்யாறு அருகே கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 3 பேரை அனக்காவூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், புரிசை கிராம ஏரிக்கரை அருகே அனக்காவூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புரிசை கிராமத்தைச் சோ்ந்த காதா் பாஷா மகன் அப்சல் (20), வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த அன்புமணி மகன் வேளியப்பன் (23), பைங்கினா் கிராமத்தைச் சோ்ந்த ஜாய் மகன் அட்கின்சன்(25) ஆகிய மூவரும் 5 கிராம் எடையுள்ள 2 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தாா்.