``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புங்கனூா் மில் காலனி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (67) என்பவரை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த ஜூன் 19-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேற்படி மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.