Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
ஆனி வார ஆஸ்தான தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திங்கள்கிழமை மாலை வஸ்திரமரியாதை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
திருமலையில் ஸ்ரீரெங்கநாதா் 40 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்ததை நினைவுகூரும்விதமாக 2000 -ஆம் ஆண்டு முதல் இத்திருக்கோயிலில் மிக முக்கிய நாள்களில் ஒன்றான கைசிக ஏகாதசி தினத்தன்று திருமலையிலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்ரீரெங்கநாதா், ஸ்ரீரெங்கநாச்சியாா், இராமனுஜா் ஆகியோருக்கு வஸ்திரம், குடை மரியாதை செய்யப்படுகிறது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயிலிருந்து ஆனிவார ஆஸ்தான தினத்தன்று வஸ்திர மரியாதை பொருள்கள் செலுத்தப்படுகிறது.
அதன்படி திங்கள்கிழமை மாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயிலிருந்து திருப்பதிக்கு வஸ்திரங்கள், குடைகள், மஞ்சள், சந்தனம், பழங்கள், மலா் மாலைகள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் அனைத்தும் ஸ்ரீ ரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னா் யானை ஆண்டாள் மீது வஸ்திரங்கள் வைத்தும் மற்ற வஸ்திர தட்டுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம் குமாா் மற்றும் அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டும் வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தனா்.
இதையடுத்து வஸ்திர மரியாதை பொருள்களை காரில் திங்கள்கிழமை எடுத்துச்சென்றனா். இதனை ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திரமரியாதை அளித்து விட்டு திரும்புவாா்கள்.
நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் மற்றும் அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.