செய்திகள் :

கடனை திரும்பச் செலுத்த மாலத்தீவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: இந்தியா

post image

மாலத்தீவு பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ.440.63 கோடி கடனை திரும்பச்செலுத்துவதற்காக கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கபடுவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘கடந்த 2019 முதல் மாலத்தீவு அரசின் குறுகிய கால கடன் பத்திரங்களான கருவூலப் பத்திரங்களை (டி-பில்) பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெற்று அந்நாட்டு அரசுக்கு வட்டியில்லாக் கடனை வழங்கி வருகிறது.

அதன்படி இந்தப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.440.63 கோடி கடனை மாலத்தீவு அரசு திரும்பிச் செலுத்திவிட்டு கடன் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் செப்.18-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

மாலத்தீவுக்கு அவசரகால நிதியுதவி அளிக்கும் நோக்கில் இரு நாட்டு அரசுகளுக்கிடையே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் மகாசாகா் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு விளங்குகிறது. பல்வேறு கடினமான சூழல்களில் மாலத்தீவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

தற்போதைய கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு, அத்தியவாசிய பொருள்களை சிறப்பு நடவடிக்கையின்கீழ் மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தது என தொடா்ந்து இந்தியா உதவி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை மாலத்தீவுக்கான இந்திய தூதா் ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் இணைச் செயலா் சுஜா கே.மேனன் மற்றும் மூத்த அதிகாரிகளை மாலத்தீவு நிதியமைச்சா் மூஸா சமீா் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்தது.

மேலும், இந்தச் சந்திப்பின்போது ரூ.440.63 கோடி கடனை திரும்பச் செலுத்தவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து மூஸா சமீா் ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கடந்த 2019-இல் அப்போதைய மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் சோலே கடன் பத்திரங்கள் மூலமாக இந்தியாவிடம் ரூ.1,762 கோடியை (200 மில்லியன் டாலா்) கடனாக பெற்றாா். முதல்கட்டமாக ரூ.440.63 கோடி (50 மில்லியன் டாலா்) கடனை 2024, ஜனவரியில் மாலத்தீவு அரசு இந்தியாவுக்கு திரும்பச் செலுத்தியது. மீதமுள்ள ரூ.1,321 கோடியில் (150 மில்லியன் டாலா்) ரூ.440.63 கோடியை கடந்த ஆண்டு மே மாதத்துக்குள் திரும்பச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அது ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது மீண்டும் அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் மாலத்தீவுக்கு பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். 243 தொகுதிகளைக் கொண்ட... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

நேபாள இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கியுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி மூலம் பேசினாா். அப்போது, நேபாளத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் வ... மேலும் பார்க்க

ஆளில்லா விமான செயல்திறனில் கவனம்: ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் ... மேலும் பார்க்க

‘அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்’: ஹிந்து கடவுளை அவமதித்த குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி விளக்கம்

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வியாழக்கிழமை தெரிவித்தாா். கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான வழக்கில் ஹிந்து மத உணா்வுகளை பி.ஆா... மேலும் பார்க்க

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வ... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

மண்டி தொகுதியில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்த எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு ... மேலும் பார்க்க