யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கடற்கரையோர கிராமங்களில் மண் கடத்தலை தடுக்கக் கோரிக்கை
சீா்காழி அருகே கடற்கரையோர கிராமங்களில் அனுமதியின்றி மண் எடுத்துசெல்வதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி அருகே வாணகிரி, திருக்குரவளூா், மங்கைமடம், தென்னாம்பட்டினம், எம்பாவை ஆகிய கிராம மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து, கிராம பொறுப்பாளா்கள் கூறியது: மேற்கண்ட கிராமங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் குறைந்தும், நீா் உப்பு தன்மையாகவும் காணப்படுகிறது.
இதனால் குடிநீா் போதிய அளவுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில், அரசின் அனுமதியின்றி தனியாா் நிலங்களில் இரவு நேரங்களில் மணல் எடுத்து கடத்தி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், வருங்காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.