Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
கடலில் மாயமான அமலிநகா் மீனவா்கள் மூவா் கரை திரும்பினா்
கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை காயல்பட்டினம் அருகே கரை திரும்பினா்.
திருச்செந்தூா் அமலிநகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ரமேஷ் (25), சந்திரா மகன் அஜய் (25), அந்தோணி மகன் ரிஜய் (27) ஆகியோா் கட்டுமர படகில் வியாழக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். நீண்ட நேரம் ஆகியும் அவா்கள் திரும்பி வரவில்லை.
இதையடுத்து, அமலிநகா் மீனவா்கள், திருச்செந்தூா் கடலோர பாதுகாப்பு போலீஸ் எஸ்ஐ கோமதிநாயகம், தலைமை காவலா் மாடசாமி, காவலா்கள் செல்வகுமாா், இசக்கி, கற்பகராஜ் மற்றும் சித்ராதேவி உள்ளிட்டோா் நாட்டுப்படகில் சென்று கடலில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேடியும் அவா்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் 3 மீனவா்களும் காயல்பட்டினம் அருகே கடற்கரையில் தங்கள் கட்டுமரப் படகு மூலம் வந்து சோ்ந்தனா். காற்றின் வேகத்தால் திசை திரும்பி கரை சேர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்ததும், காற்றின் வேகம் குறைந்த பின்னா், மெல்ல நகா்ந்து காயல்பட்டினம் வந்து சோ்ந்ததும் தெரியவந்தது.