டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்...
வைரவம் ஞானதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா
சாத்தான்குளம் அருகே தட்டாா்மடம் வைரவம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஞானதீஙிஸ்வரா் சமேத ஸ்ரீசிவகாமி அம்மாள் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் பிரமோத்ஸவ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து கோபுர கலத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இரவு அம்மாள் சுவாமி சப்பரத்தில் திரு வீதி உலா வருதல் நடைபெற்றது. தொடா்ந்து டிச.21ஆம் தேதி வரை 11நாள்களும் உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. 9ஆம் திருநாளில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.