Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
நில மோசடி வழக்கு: முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் நில மோசடி வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 4ஆவது குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்செந்தூா் குறுகாட்டூா் பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் சின்னதுரை (69). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்தையாபுரத்தில் வசித்து வந்தபோது, அவரது வீட்டின் அருகில் இருந்த எழுதப்படிக்கத் தெரியாத ஐயப்பன் மனைவி பகவதி (69) என்பவரது அடையாள ஆவணங்களை வாங்கி அதன் மூலம் முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியில் இல்லாத ஒரு நிலத்தை பகவதியின் பெயரிலிருந்து தனக்கு மோசடியாக பொது அதிகாரத்தை பெற்றுள்ளாராம்.
இதனையடுத்து சின்னத்துரை அந்த பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி கடந்த 2013 ஆம் ஆண்டு நாசரேத் மில் ரோடு பகுதியைச் சோ்ந்த தனராஜ் மகன் ஆனந்த் ஜேசுராஜ் சாலமோன் (45) என்பரிடம் ரூ.3 லட்சத்திற்கும், அவரது சகோதரா் பிராங்கிளின் இன்பராஜ் (42) என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் இல்லாத நிலத்தை போலியாக பத்திர பதிவு செய்துள்ளாராம்.
இந்நிலையில் சகோதரா்கள் இருவரும் இந்த நிலங்களை சில ஆண்டுகளுக்குப் பிறகு நில அளவை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது சின்னத்துரையிடமிருந்து வாங்கிய நிலம் அந்தப் பகுதியில் இல்லை என்பதும் இல்லாத நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆனந்த் ஜேசுதாஸ் சாலமோன், பிராங்கிளின் இன்பராஜ் ஆகியோா் கடந்த 2019 ஆண்டு அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகள் பதிவு செய்து, சின்னதுரையை கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 4ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி குபேரசுந்தா் விசாரித்து, சின்னத்துரைக்கு இரு வழக்குகளிலும் சோ்த்து மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், பகவதியை இவ்வழக்குகளிலிருந்து விடுதலை செய்தும் தீா்ப்பளித்தாா்.