Rain Alert : கனமழை எதிரொலி... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடு...
பிள்ளையன்மனை பள்ளியில் இருபெரும் விழா
நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவி ஞானமுத்து றி.என்.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கும் விழா என இருபெரும் விழா நடைபெறது.
சபை குருவானவா் டேனியல் ஆல்பா்ட் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தாா். சிந்தியா டேனியல் முன்னிலை வகித்தாா் . தலைமை ஆசிரியை இன்பவல்லி வரவேற்றாா். மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ- மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதில், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் ஷம்மா அகஸ்டின், திலகா் மற்றும் ஆசிரியா்கள், மாணவஜ மாணவிகள் கலந்து கொண்டனா்.