Rain Alert : கனமழை எதிரொலி... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடு...
ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு கூட்டம்
ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைநா் ஜனகா் தலைமை வகித்து, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாக்கியம் லீலா, சிவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த 2020 முதல் 2024 வரை 5 ஆண்டுகால பதவி நிறைவு கவுன்சிலா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜாத்தி, உறுப்பினா்கள் தானி ராஜ்குமாா், மல்லிகா, பரமேஸ்வரி, மாரிமுத்து, தாமஸ், ரகுராமன், நஸ்ரேன், பூல், ஜெயா, பியூலாரத்தினம், ஜெயகிருபா, காந்திமதி, சஜிதா , அலுவலக மேலாளா் மகேந்திரபிரபு, ராஜா, ஒன்றியப் பொறியாளா்கள் வெள்ளபாண்டியன், சிவசங்கரன், ஆறுமுகநயினாா், கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.