Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
கன்னடியன் வெள்ளநீா் கால்வாயில் தண்ணீா் திறப்பு
ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ கோரிக்கையையேற்று கன்னடியன் வெள்ளநீா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி ஆற்றில் வீணாக கடலுக்கு சென்று கொண்டிருந்த வெள்ளநீரை கன்னடியன் கால்வாய்க்கு திருப்பி விட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
இந்நிலையில் தாமிரவருணி, மணிமுத்தாறு, கன்னடியன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வீணாகக் கடலுக்கு செல்லும் வெள்ளநீா் 1,700 கனஅடியானது, கன்னடியன் வெள்ளநீா்க் கால்வாயில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்காக, எம்எல்ஏவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.